Sunday, February 21, 2010

"ஜோதி"யில் தோன்றினார் சமதீஸ்வரர்"

ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்த்ரிகளது 76 வது வருட ஆராதனை உத்ஸவம் கடந்த 07.11.09 சனிக்கிழமை அன்று சித்தமல்லியில் உள்ள அவரது அதிஸ்டானத்தில் மிக விமரிசியாக நடந்தது.




இந்த அதிஸ்டானம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து முதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள சித்தமல்லி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து 28 கி.மி. தொலைவிலும், முதுப்பேட்டையில் இருந்து 6 கி.மி. தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமம் ஒரு காலத்தில் மிக சீரும் சிற்ப்புமாக, வேத மந்திரங்களோடு ஒளித்து வந்தது.

ஆனால், இப்போது இதே சித்தமல்லி - "வெறிச்சோடிய" நிலையில் - மக்கள் நடமாட்டமே இல்லாமல் ஓர் இடம் போல் பரிதாபக் காட்சி அளிக்கிறது!

இதே சித்தமல்லி - ஸ்ரீ யதீந்ராளின் ஆராதனையொட்டி, மக்கள் மத்தியில், மிக சிறப்பாக, களை- க்கட்டி, மனதிற்கு மிக மகிழ்சியான ஓர் காட்சி அளித்தது. அப்பேர்பட்ட இந்த கிராமத்தில், "சித்தமல்லி பெரியவா" என்று அழைக்கப்படும் சுப்ரமண்ய சாஸ்த்ரிகள், அதிஸ்டானத்தின் மகிமையை மக்கள் எல்லோரும் அறியவேண்டும்.

அவருடைய 76 வது ஆராதனை எப்போதும்போல் காலையில் [07.11.09] சுமார் 9 மணி அளவில், "ருத்ர பாராயணம்", "சமகம்" மற்றும் "உபநிஷத்" மந்திரங்கள் எல்லாம் வெகு விமரிசியாக வேத பண்டிதர்கள் ஒளியுடன் தொடங்கிற்று.

விடாமல் மழை பெய்துக்கொண்டிருந்தது. "கொட்டோகொட்டு" என்று பெய்தாலும், ஸ்வாமிகளின் அனைத்து உறவினர்களும், அவருடைய ஆசிகளை பெற, இந்த ஆராதனை விழாவிற்கு வந்திருந்தனர்.

இங்கு சொல்ல விரும்புவது எனனவென்றால், ஆராதனை தொடங்கியதும், மழை பெய்வது நின்று விட்டது! பிறகு, ஆராதனை முடிந்தபின், மழை மறுபடியும் பெய்ய தொடங்கியது! இது என்ன ஆச்சிரியம்!! ஸ்வாமிகள் "யதீந்ராள்" இவ்வாறு அவருடைய "மகிமை" யால் செய்தார்போல் எல்லோர் மனதிலும் தோன்றியது! என்ன சக்தி! என்ன ஆச்சரியம்! இவர் ஓர் "ஆத்மஞானி" அல்லவா...? !! இதில் துளிகூட சந்தேகத்திற்கு இடமே இல்லை!!

மேலும் ஓர் அதிசயமான/ஆச்சரியமான சம்பவம் இதற்கு பின் நிகழ்ந்தது....

அபிஷேகம் என்றல் "விபூதி" அபிஷேகம் மிகச் சிறந்தது என்று கூறுவார்கள். இப்படி பட்ட இந்த"விபூதி" அபிஷேகம் நடந்தபின், குருக்கள் மாமா, எங்களிடம் வந்து, "விபூதி

அபிஷேகம் நடந்து முடிந்தது---- இது மிகவும் சிறப்பானது ----எல்லோரும் போய் ஸ்வாமிகளை ந்ன்றக வேண்டிக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, அவர், அடுத்து வரும் அலங்காரத்திற்கு தயார் செய்யும் வேலையில் இறங்கினார். பின்பு, எல்லோரும் அருகில் சென்று ப்ரார்தனை செய்துக்கொண்டோம். செல புகைப் படங்களையும் எடுத்தோம்.

பிறகு, ஆராதனை முடிந்த பிறகு, அவரவர் த்ங்களது ஊருக்கு செல்ல தயாராகினோம்--- சென்றடைந்தோம்.

நாங்கள் வீட்டிற்கு வந்த பிறகு [சென்னை], எல்லா புகைப் படங்களையும் பார்துக்- கொண்டிருக்கும் போது, அந்த "விபூதி அபிஷேகம்" புகைப் படத்தில், உற்றுப்பார்கும் போது,

ஓர்" ஜோதி" தெரிந்தது! இந்த "ஜோதி" அவறுடைய அதிஷ்டானத்தின் மேல் "பரமாச்சாரியார்ரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்" பின்புறம் தோன்றியவாரு காட்சி அளித்தது!!!


எங்கள் கண்களால் இதனை நம்ப முடியவில்லை...என்ன அர்புதமான காட்சி இது! ஆனாலும் இது உண்மை!! அந்த மஹான் "ஜோதி" வடிவத்தில் நம்க்கு இந்த அற்புதமா காட்சி அளித்திருக்கிறார் என்று நினைக்கும் போது, உடம்பு சிலிர்க்கிறது!! என்ன மகிமை! எங்கள் "காமரா"வில் மட்டும் இந்த "ஜோதி" தோன்றிருக்கிறது என்று நினைக்கும் போது, இது எங்கள் "பாக்கியம்" என்று தான் கருத முடியும்!!

மேலும் இந்த "ஜொதி"யை உற்றுப் பார்த்தால், நம் கண்களுக்கு இந்த "மகானின்" உருவம் தோன்றுகிறது. இத்தனை காலமாக இல்லாத இந்த "அர்புத காட்சி" எங்கள் எல்லோர் கண்களுக்கும் காட்சி அளித்திருக்கிறார் என்று நினைக்கும் போது, இது உண்மையாகவே ஓர்"அதிசயம்" தான்!!



இந்த அற்புதமான "ஜோதி"யில் ஓர் விஷயம் சொல்ல வேண்டும்-- 'ஜோதி"யின் "கீழ்- பாகம்" - மிகவும் ப்ரகாசமாக தெரிகிறது --- மற்ற 'ஜோதி"யில் மேல் பாகம் தான் ப்ரகாசமாக இருக்கும். இது ஒரு அதிசயச் காட்சி தான்!!!

இன்னொறு விஷயம் இங்கு கூற வேண்டும்....பெரும்பாலான "அதிஷ்டானம்" துலசி மடம் தான் வைக்கப் படும்....ஆனால், இந்த "அதிஷ்டாநத்தின் மேல் ஒரு சிவலிங்கம் "மஹாபெரியவரால்" வைக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கும் போது, சித்தமல்லி மஹானின் "மகிமை" யை எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டும்!! மஹா பெரியவா "யதீந்ராள் ஸ்வாமிகளை" மிக உயர்வான இடத்தில் வைத்திருந்தாராம்...!!

மேலும், இப்படிப்பட்ட ஓர் மகத்தான் ஆத்மா நம் குடும்பத்தில் அவதரித்திருக்கிறார் என்று நினைக்கும் போது, மனம் பெருமையாக இருக்கிறது!!

மகான் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்த்ரிகள்[யதீந்திராள்] இப்படி ஓர் அற்புதமான காட்சி அளித்ததின் நோக்கம் என்ன....?... என்ன சொல்ல வ்ருகிறார்...? இதை போல், அவருடைய உறவினர்கள் ம்ற்றும் பக்தர்களின் மனதில் மிக ஆழமாக விடையிலாத கேள்விகள் கிளம்பிருக்கிறது.

இவர் நம் எல்லோருக்கும் ஓர் "வழி காட்டியாக" இருந்து வருகிறார் என்று உறுதியாக கூற் முடியும்!


இவருடைய "அதிஷ்டானத்தை" வணங்கி, அவரை நம்பியவர்கள், கணவில் வந்து இன்றும் "அனுக்கரஹம்" செய்து வருகிறார் என்ற ஓர் உண்மையான நம்பிக்கை!!

மேலும் மேலும் இந்த "மகானின்" மகிமையும், புகழும் பறவ வேண்டும்.......எல்லா மக்களுக்கும் இவருடைய மகிமையை அரிய வேண்டும். சித்தமல்லி கிராமம் மீண்டும் சீரும்-சிறப்புமாக திகழவேண்டும்....வேத கோஷங்களுடன் ஒளிக்க வேண்டும்.... நிச்சயமாகநம் மக்களால்/நம்மால் இதனை செய்துக்காட்ட முடியும்....செய்துக்காட்ட வேண்டும்!! மக்கள் எல்லோரும் அவருடைய "அதிஷ்டானத்தை" ஒரு முறையாவது தரிசித்து வரவேண்டும். அவருடைய "அனுக்ரகம்" பெற வேண்டும்!

இது போன்ற புராதன புண்ணிய ஸ்தலங்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காலங்களைக் கடந்து தரிசனம் தர வேண்டாமா..? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, தனம் சேர்ந்தால் தரிசனம் உண்டு, இறைவனின் திருப்பணிக்கு இயன்ற வரை உறுதுணையாக இருப்போம்!!


"சமதீஸ்வரரின் "ஒளி" மக்களிடம் வீசட்டும்....பறவட்டும்"......

மெலும் இந்த அதிஸ்டானத்தை நாடிச் செல்வோர்களுக்கும்/ விவரங்களுக்கும், நீங்கள் அனுக வேண்டிய நபர்கள்:

1. ஸ்ரீ வீ. சுப்ரமண்னியன், [அட்வகேட்] , சென்னை. தொலைபேசி: 98407 89261
2. ஸ்ரீ "ஜோதிஸரத்னா" ராமன், பாண்டிச்சேரி. தொலைபேசி: 94433 09858 / 0413- 2251842
Related Posts with Thumbnails